×

கத்தி முனையில் மிரட்டி மலேசியா வாழ் தமிழர்களிடம் 11 சவரன், 20 ஆயிரம் பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: சைதாப்பேட்டை சாலையில் நடந்து சென்ற மலேசியா வாழ் தமிழர்களை, கத்தி முனையில் மிரட்டி 11 சவரன் செயின், ₹20 ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட்டை பறித்துச் சென்ற 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (62). இவர், மலேசிய நாட்டில் குடியுறிமை பெற்று வசித்து வருகிறார். சிகிச்சைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன், சென்னை வந்தார். பின்னர், சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி, தாம்பரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில், இவரை காண அவரது மகன் கபிலன் (21) நற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்துள்ளார். மகன் கபிலனை அழைத்து கொண்டு லட்சுமணன் விமான நிலையத்தில் இருந்து கால்டாக்சி மூலம் சைதாப்பேட்டை நந்தனம் சிக்னல் அருகே நள்ளிரவு 1 மணிக்கு வந்து இறங்கினர்.

பின்னர் இருவரும் சாலையில் நடந்து, லாட்ஜிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, 3 பேர் இவர்களை வழிமறித்து பணம் பறிக்க முயன்றனர். இதனால், இருவரும் வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர். உடனே கொள்ளையர்கள் கபிலன் கழுத்தில் கத்தியை ைவத்து மிரட்டி, 11 சவரன் செயின், ₹20 அயிரம், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.  இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமணன் மற்றும் அவரது மகன் கபிலன் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று 3 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமணன் தங்கி உள்ள லாட்ஜ் ஊழியரான அர்ஜூன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tamils ,Malaysia ,
× RELATED மும்பையில் வசிக்கும் தமிழருக்கு...